- devangaartscollege70@dac.ac.in
- 04566-240142/034
1. மாணவ /மாணவிகள் 15 நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
2. 16 முதல் 25 நாட்கள் வரை விடுமுறை எடுத்தால் ரூ. 300 கட்டணம் செலுத்தி தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
3. 26 முதல் 40 நாட்கள் விடுமுறை எடுத்தால் ரூ. 600 கட்டணம் செலுத்தி அந்த பருவத் தேர்வை அடுத்த பருவத் தேர்வுடன் எழுத அனுமதிக்கப்படுவர்.
4. 41 நாட்களுக்கு மேல் விடுமுறை எடுத்தால் அந்த பருவத் தேர்வை எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். அடுத்த கல்வி ஆண்டில் அதே பருவத்தில் கல்லூரிக்கு வருகைபுரிந்து வருகைப் பதிவினை பூர்த்தி செய்தால் மட்டுமே தேர்வை எழுதலாம்.
குறிப்பு : மருத்துவ விடுப்பு உட்பட
பருவத்தேர்வுகளில் (Semester Examinations) ஏதாவது ஒரு முறையில் விடைகளை பார்த்து எழுதும் மாணவ, மாணவிகள் ஆசிரியர்களிடம் பிடிபட்டால் அதற்கு அடுத்த நாள் முதல் எந்தத் தேர்வையும் எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் பிடிபடுவதற்கு முன்னால் எழுதிய அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படும். இவ்வாறு பிடிபடும் மாணவர் பிடிபட்ட தேர்வை மட்டும் 6 மாதம் கழித்துதான் (ஒரு பருவமுறை விட்டு அதற்கு அடுத்த பருவத்தேர்வு) தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்.